அனுரவிடமிருந்து புதிய ஜனாதிபதி செயலாளர்.. 15 அமைச்சர்கள் கொண்ட தற்காலிக அமைச்சரவை

நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், புதிய ஜனாதிபதி செயலாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் 15 அமைச்சர்கள் கொண்ட தற்காலிக அமைச்சரவை ஒன்று நியமிக்கப்பட உள்ளது என்றார்.

அநுர திஸாநாயக்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின் , வெற்றிடமாகும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கொழும்பு மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தி விருப்பு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள லக்ஷ்மன் நிபுணாராச்சி நியமிக்கப்பட உள்ளார்.

நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க இன்று பதவியேற்க உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

பதவியேற்பு விழா ஜனாதிபதி செயலகத்தில் சிறு நிகழ்வாக நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.