அநேக அரசியல்வாதிகள் வெளிநாடு செல்கிறார்கள்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் கடந்த 21ஆம் திகதி 06:00 மணி முதல் இலங்கை விமானப்படையினர் குவிக்கப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
கடந்த போராட்டத்தின் போது கட்டுநாயக்கா விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் சாதாரண மக்கள் ஒன்றுகூடியது போல , கூடுவதை தடுக்கும் வகையில் இலங்கை விமானப்படையினர் திரண்டிருந்த விதம் விமான நிலையத்தினூடாக வெளியேற வரும் அரசியல் பிரமுகர்களிடம் விசாரணை நடத்தியதை தடுப்பதற்காக எனத் தெரிகிறது.
இலங்கை அரசியல் பிரமுகர்கள் பலர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
அதன்படி, (21ஆம் திகதி) மாலை 02.25 மணியளவில் முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே , இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏஐ-272 விமானத்தில் இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.
21ஆம் திகதி இரவு 11.15 மணியளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தாய் எயார் ஏசியா விமானம் FD-141 இல் தாய்லாந்தின் பாங்கொக் நோக்கிச் சென்றார்.
இத்தே கந்தைச் சத்தாதிஸ்ஸ தேரர் இன்று (22) அதிகாலை 12.50 மணியளவில் Cathay Pacific Airlines விமானமான CX-610 இல் ஹொங்கொங் நோக்கிப் புறப்பட்டார்.
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தந்தை திலகசிறி வீரசிங்க ஆகியோர் டுபாய் சென்று உள்ளதாக கூறப்படுகிறது.