இரண்டாவது விருப்பம் கணக்கிட தேவைப்படுமா?
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நேற்று (22) இடம்பெற்ற வாக்கெடுப்பில் இதுவரை அறிவிக்கப்பட்ட பெறுபேறுகளின்படி எந்தவொரு வேட்பாளரும் 50% ஐ தாண்டவில்லை.
இந்நிலையில் இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வெளியாகியுள்ள பெறுபேறுகளின்படி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளார். சஜித் பிரேமதாச இரண்டாவது இடத்தில் உள்ளார். இருப்பினும், இருவருக்கும் இடையே 10 சதவீதத்திற்கும் அதிகமான இடைவெளி உள்ளது.