பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உதவுவோம் …. அனுரவிடம் சஜித்

இந்த நாட்டை கட்டியெழுப்புவதை வெற்றி பெற்ற கட்சியால் மட்டும் செய்துவிட முடியாது… அதற்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உதவுவோம் …. அனுரவிடம் சஜித் !

நாட்டில் இதுவரை எதிர்கட்சித் தலைவர் ஒருவர் செய்த பக்குவமான கதைகளில் ஒன்றை இன்று சஜித் செய்தார்…

நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளதாகவும், தாயகத்தை மீளக் கட்டியெழுப்புவதை வெற்றி பெற்ற கட்சியால் மட்டும் செய்ய முடியாது எனவும் , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்துள்ளார்.

அந்த நோக்கத்திற்காக முன்னெடுக்கப்படும் எந்தவொரு ஜனரஞ்சக மற்றும் ஜனநாயக செயற்பாட்டிற்கும் எந்தவொரு ஆதரவையும் வழங்க தயார் என புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று தெரிவித்தார்.

நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் பின்னர் ராஜகிரிய தேர்தல் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவரது அறிக்கை பின்வருமாறு.

2024 ஜனாதிபதித் தேர்தலின் இறுதியில் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு முதலில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக, நமது தாய்நாட்டை தற்போது நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து காப்பாற்ற அவருக்கு தைரியமும் அதிர்ஷ்டமும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

இந்த நாட்டில் உள்ள 220 லட்சம் மக்களின் விருப்பங்களும் நம்பிக்கைகளும் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஜனரஞ்சக மற்றும் ஜனநாயக முடிவுகளில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு தேவையான ஆதரவை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம் என உறுதியளிக்கிறேன்.

மேலும், இந்த ஜனாதிபதித் தேர்தலில், எமது நிகழ்ச்சி நிரலுடன் எமது அணி முன்வைத்த கொள்கைகளைகளுக்கும் , எனக்கும் வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதற்கு கிடைத்த இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது நாடு கடினமான சூழ்நிலையில் உள்ளது. பல சவால்களுக்கு முகங்கொடுத்துள்ள இவ்வேளையில், நாட்டை மீட்பது வெற்றிபெறும் கட்சிக்கு மாத்திரமன்றி இந்த நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளினதும் பொறுப்பு என நாம் நம்புகின்றோம்.

தேர்தல் நடைமுறைகள் முடிந்துவிட்டன, நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாடு, நாட்டைப் பலப்படுத்தி அபிவிருத்தி செய்யும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்கு, எங்கள் நாட்டின் 220 லட்சம் மக்களுக்கு நீங்கள் வழங்க வேண்டிய ஆதரவை வழங்க உத்தேசித்துள்ளோம்.

இந்த ஜனநாயகத்தை வெல்ல வாக்களித்த அனைவருக்கும் நன்றி என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.