புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்த பின் பாராளுமன்றம் கலைக்கப்படும்?
நாட்டின் புதிய ஜனாதிபதியாக அனுர திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனுர திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதுடன், வரையறுக்கப்பட்ட அமைச்சரவையும் நியமிக்கப்படவுள்ளது.
அதன் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் பாராளுமன்றத்தின் ஊடாக புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது.