சஜித்துக்கும் , ரணிலுக்கும் வாக்களித்த மாவை : எரிகிறது தமிழரசுக் கட்சி !
மாவை சேனாதிராஜா கட்சி உடன்படிக்கையை உடைத்து சஜித்துக்கு வாக்களித்ததோடு , ரணிலுக்கு விருப்பு வாக்கை கொடுத்தார் என தகவல் கசிந்ததனால் தமிழரசு கட்சியின் உள்ளே பிரச்சனையாகி உள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசு கட்சி கட்சியின் மாநாட்டின் தீர்மானத்துக்கு எதிராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வாக்களித்ததாக இன்று (22) அம்பலமாகியுள்ள நிலையில் அக்கட்சியில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க இலங்கைத் தமிழரசு கட்சிக் கட்சி தீர்மானித்திருந்த வேளையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இருவருக்கு வாக்களித்துள்ளார்.
யாழில் இருந்த ஊடகவியலாளர்கள் முன்னாள் எம்.பி.மாவை சேனாதிராஜாவிடம் கேட்ட போது, தான் சஜித் பிரேமதாசவிற்கும் , ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வாக்களித்ததாக தெரிவித்தார்.
ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மூன்று வேட்பாளர்களுக்கு மூன்று விருப்புரிமைகளை வழங்கியதாக தெரியவந்துள்ளது.
மத்திய குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் மீறுவது கடும் பிரச்சனை என அக்கட்சியின் மற்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்தில் மேலும் இரண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பொறுப்புணர்வையும் உடன்பாடுகளையும் மீறி செயற்படுவது பாரிய பிரச்சினையாக உள்ளதாக பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் வெளியாகியதால் கட்சியில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது, இது குறித்து கட்சியின் தலைவர் எஸ்.சிறீதரனிடம் கேட்டபோது, கட்சியை சேர்ந்த எவரையும் நம்ப முடியாது என்றார்.