இலங்கை அதிபருக்கு வாழ்த்துத் தெரிவித்த மோடி.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் அதிபராகப் பொறுப்பேற்ற அனுரகுமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
அது குறித்துத் திரு மோடி ‘X’ தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
“நம் நாட்டு மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு இரு நாடுகளுக்கிடையே இருக்கும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணிபுரிவதற்கு ஆவலுடன் உள்ளேன்,” என்றார் இந்திய பிரதமர் மோடி.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இலங்கை முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அவர் சொன்னார்.
திசாநாயக்க நேற்று (22 செப்டம்பர்) இலங்கையின் அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டார்.