அனுரவை வாழ்த்திய ரணில் : வெற்றி அனைவருக்கும் சொந்தம் என்ற அனுர.
மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இலங்கையின் புதிய ஜனாதிபதி அறிவிக்கப்பட்டதும் , முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
“என்னால் முடிந்தவரை நாட்டை நிலைப்படுத்த முயற்சி மேற்கொண்டேன். திசாநாயக்க நாட்டை நல்வழியில் முன்னெடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன்,” என்றார் விக்ரமசிங்க.
“பல்லாண்டுகளாக இருந்த கனவு நனவாகவிருக்கிறது. இந்த வெற்றி அனைவருக்கும் சொந்தம். இலங்கையின் வரலாற்றை மாற்றி எழுதுவதற்கு நாம் தயாராக உள்ளோம்,” என திசாநாயக்க கூறினார்.