பதவியேற்ற இலங்கை ஜனாதிபதிக்கு சீனாவின் வாழ்த்து
இலங்கை ஜனாதிபதியாக மார்க்சியவாதி அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) பதவியேற்றுள்ளார்.
ஊழல் இல்லாத அரசியலைக் கொண்டுவரவிருப்பதாகவும் நாட்டின் பொருளியலை மீட்கவிருப்பதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
“நம்முடைய நாடு சவால் மிகுந்தது. நாம் அதை நன்கு அறிந்துள்ளோம். நம்முடைய அரசியல் நடைமுறைகளில் ஊழல் இருக்கக்கூடாது,” என்று மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அவர் சொன்னார்.
திசாநாயக்கவின் பதவியேற்புக்குச் சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping) வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இருநாட்டு உறவுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் அந்த நட்பைத் தொடர விரும்புவதாகவும் சி சின்பிங் சொன்னார்.
உலகெங்கும் உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்ய எண்ணும் சீனாவின் Belt and Road திட்டத்தின்கீழ் இலங்கையில் சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில் இலங்கை சில கடன்களைக் குவித்துள்ளது.
இந்நிலையில் திசாநாயக்கவின் தலைமைத்துவத்தின்கீழ் Belt and Road திட்டத்திலிருந்து பலனைப் பார்க்க விரும்புவதாகத் சி சின்பிங் சொன்னார்.