ஆஸ்கார் விருதுக்கு ஆறு தமிழ் படங்கள் பரிந்துரை.

97வது ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் இந்தியில் வெளியான ‘லாப்பட்டா லேடீஸ்’ படம் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் மகாராஜா, ஜிகர்தண்டா டபள் எக்ஸ், கொட்டுக்காளி, வாழை, தங்கலான், ஜமா ஆகிய 6 தமிழ் படங்கள் உட்பட மொத்தம் 29 இந்திய படங்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

‘ஆஸ்கார்’ விருது, சினிமா உலகில் பெரிய விருதாகப் பார்க்கப்படுகிறது. இந்தியப் படம் ஒருமுறையாவது இந்த விருதைப் பெற்று விடாதா என்பதே சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரின் ஏக்கமாக இருந்து வருகிறது.

முன்னதாக, ‘ஸ்லம்டாக் மில்லியனெர்’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘ஆஸ்கார்’ விருதை வென்று இந்திய சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதனைத் தொடர்ந்து அண்மையில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கார் விருது பெற்றார், இசையமைப்பாளர் கீரவாணி.

அண்மையில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற கல்கி 2898 ஏடி, ஆடு ஜீவிதம், ஆட்டம், சாம் பகதூர், ஆர்டிக்கிள் 370, அனிமல், உள்ளொழுக்கு, வீர் சாவர்க்கர் உள்ளிட்ட படங்கள் என தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தி, ஒடியா ஆகிய மொழிகளிலிருந்து மொத்தம் 29 படங்கள் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.