அதிகரிக்கும் கமலா ஹாரிஸிற்கான ஆதரவு .

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரிஸிற்கு (Kamala Harris) ஆதரவு கூடுவதாகப் புதிய கருத்தாய்வு கூறுகிறது.

குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப்பை (Donald Trump) விடத் ஹாரிஸ் 5 விழுக்காடு கூடுதல் ஆதரவைப் பெற்றிருப்பதாக NBC செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆய்வு சொல்கிறது.

நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ள 1,000 பேர் ஆய்வில் கலந்துகொண்டனர்.

ஹாரிஸிற்கு 48 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்தனர்.

ஜூலை மாதம் அது 32 விழுக்காடாக இருந்தது.

40 விழுக்காட்டினர் டிரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.

CBS செய்தி நிறுவனம் நடத்திய ஆய்விலும் ஹாரிஸிற்கு ஆதரவு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.

டிரம்ப்பை விடத் ஹாரிஸ் 4 விழுக்காடு கூடுதல் ஆதரவைப் பெற்றுள்ளார்.

டிரம்ப்புக்கு 48 விழுக்காட்டு ஆதரவும் ஹாரிஸுக்கு 52 விழுக்காட்டு ஆதரவும் இருப்பதாக ஆய்வு காட்டுகிறது.

ஹாரிஸ் எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற்றால், அமெரிக்காவின் 248 ஆண்டு வரலாற்றில் அதிபர் பதவியை ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுவார்.

Leave A Reply

Your email address will not be published.