6 வயதில் கடத்தப்பட்டவர் 79 வயதில் குடும்பத்துடன் இணைந்த சம்பவம்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் 1951ம் ஆண்டில் 6 வயதில் கடத்தப்பட்டவர் 79 வயதில் குடும்பத்துடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த லுயிஸ் அர்மாண்டோ அல்பினோ, ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்குமுன், பிப்ரவரி 21ம் தேதி கலிஃபோர்னியாவில் உள்ள பூங்கா ஒன்றில் நண்பருடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது இனிப்பு வாங்கிக் கொடுக்கப்போவதாகக் கூறி ஏமாற்றி பெண் ஒருவர் அவரைக் கடத்திச் சென்றார். அதையடுத்து அவரின் பெற்றோர் நீண்ட காலமாகப் போராடியும் அவர் கிடைக்கவில்லை.

70 ஆண்டுகளுக்கும் மேலாக அவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. ஆனால் அவர் எப்போதும் அவரது குடும்பத்தினரின் நினைவுகளில் இருந்தார்.

இந்நிலையில் ஆறு வயதில் கடத்தப்பட்ட அவர், 79 வயதில் குடும்பத்துடன் இணைந்துள்ளார்.

அல்பினோவின் மருமகள் காவல்துறை, நீதித்துறை ஆகியவற்றின் உதவியோடு அவரைக் குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தார்.

“அவர் எனது மாமா. என்னைக் கட்டிப்பிடித்து, என் கன்னத்தில் முத்தம் கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இணையத்தில் குலமரபுப் பரிசோதனையை மேற்கொண்டார். இதுதான் மாமாவை மீட்க உதவியது,” என்றார் அல்பினோவின் மருமகள்.

துரதிர்ஷ்டவசமாக, 2005ல் தனது 92 வயதில் தாயார் காலமானபோது, அல்பினோ குடும்பத்துடன் இன்னும் இணையவில்லை.

“இதுதான் எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது,” என்று அல்பினோவின் குடும்பத்தினர் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.