ஆர்ப்பாட்டங்கள் , பேரணிகள் தடை
இந்த வாரம் முதல் ஆர்ப்பாட்டங்கள் , பேரணிகள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
குழுவாக கூடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் சட்டத்தை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு காவல்துறை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
யாரையும் துன்புறுத்தாமல் அனைவரும் மகிழ்ச்சியாக வெற்றியை கொண்டாடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.