இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் வலுவடையும் : சீன நிபுணர்கள் கருத்து.
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்படுவதன் மூலம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும் என சீன நிபுணர்கள் கருத்து வெளியிட்டதாக குளோபல் டைம்ஸ் டேப்லாய்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது பதவிக்காலத்தில் சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு மிகவும் நடைமுறை மற்றும் நட்புரீதியான அணுகுமுறையை கடைப்பிடிப்பார் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
கடந்த தசாப்தத்தில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வளர்ந்து வருவதாகவும், குறிப்பாக One Belt One Road project திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் உள்ளூர் அபிவிருத்தி உத்திகளை ஆரம்பித்து வைத்தல் என அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் புதிய நிர்வாகத்துடன் இந்த உறவுகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சிங்குவா பல்கலைக்கழகத்தின் தேசிய வியூக நிறுவகத்தின் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் திரு. சியான் ஃபெங் நேற்று முன்தினம் (22) குளோபல் டைம்ஸுக்கு பேட்டியளித்தார். . ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியும் சீனாவுடன் பல கருத்தியல் ஒற்றுமைகளைப் பகிர்ந்துகொள்வதாகவும், சீனாவுடனான இலங்கையின் உறவை திசாநாயக்கவுடன் நெருக்கமாக உள்ளது எனவும் ஃபெங் கூறினார்.
எவ்வாறாயினும், சீனா மற்றும் இந்தியாவுடன் இலங்கை சமநிலையான உறவைப் பேண எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.