நிதி அனுரவிடம் , பிரதமராக ஹரிணி.. 4 உத்தேச அமைச்சர்கள்..
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று தற்காலிக அமைச்சரவையொன்றை நியமிக்க உள்ளார்.
அங்கு 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு 15 அமைச்சர் பதவிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
சுற்றுலா, பாதுகாப்பு, நிதி, நீதி, கைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு ஆகிய அமைச்சுகளை ஜனாதிபதி வைத்திருப்பார் என உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய பிரதமர் வெளியுறவு, கல்வி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பதவிகளையும் வகிப்பார்.
பிரதமராக திருமதி ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்து கொள்வதாகவும், அமைச்சர்களாக விஜித ஹேரத் மற்றும் லக்ஸ்மன் நிபுன ஆராச்சி ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.