புதிய ஜனாதிபதி 5 வருடங்கள் ஆட்சி செய்வதற்க்காக பதவியேற்றுள்ளதாக வர்த்தமானி.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்க 5வருட காலத்திற்கு ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளதாக விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அனுரகுமார திஸாநாயக்க, 2024 செப்டெம்பர் 23 அன்று, அரசியலமைப்பின் நான்காவது உப அட்டவணை மற்றும் ஏழாவது உப அட்டவணையில் கூறப்பட்டுள்ளவாறு உறுதிமொழி மற்றும் கையொப்பமிட்டு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசில் ஐந்து வருட காலத்திற்கு அரசியலமைப்பின் பிரிவு 32 மற்றும் பிரிவு 157 A இன் துணைப்பிரிவு (7). இந்த வர்த்தமானி அறிவிப்பில் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதாக அறிவிக்கிறது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் புதிய செயலாளர் கலாநிதி என்.எஸ்.குமாநாயக்கவினால் நேற்று (23) வெளியிடப்பட்டது.