எஸ்.பி.பாலா பெயரை தெருவுக்குச் சூட்ட வேண்டும் என கோரிக்கை.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பெயரை சென்னை உள்ள காம்தார் நகரில் உள்ள தெருவுக்குச் சூட்ட வேண்டும் என அவரது குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “நீண்டகாலமாக தனது இசையின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார் எஸ்.பி.பாலா.
“அவர் தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்த சென்னை காம்தார் நகருக்கு அவரது பெயரை சூட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று சரண் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், திரையுலகத்தைச் சேர்ந்த பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், முன்னணி கலைஞர்கள் பலரும் இந்தக் கோரிக்கையை ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில், தன் தந்தை நீண்டகாலமாக வசித்த காம்தார் நகர் தெருவுக்கு எஸ்.பாலா பெயரைச் சூட்ட வேண்டும் என அவரது மகன் கோரிக்கை விடுத்துள்ளார்.