இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அனுர திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.
இதன்படி, 24ம் திகதியூன இன்று நள்ளிரவில் பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக அரசாங்க அச்சகம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் நவம்பர் 21ஆம் தேதி தொடங்குகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி அக்டோபர் 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நண்பகல் 12 மணிக்கு நடைபெறும்.