ஜனாதிபதி விசேட கலந்துரையாடலில்.. இதுவரையில் இடம்பெற்ற மிக தீர்க்கமான சந்திப்பு இது..
ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் நேற்று பிற்பகல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இதில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன இணைந்து கொண்டிருந்தார்.
கடந்த அரசாங்கத்தில் நிதி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய மகிந்த சிறிவர்தன இம்முறையும் நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் மாற்றம் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், மத்திய வங்கியின் ஆளுநர் தனது பதவியை இராஜினாமா செய்யாவிட்டாலோ அல்லது பதவிக்காலம் முடிவடையாதாவிட்டாலோ அவரை நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.