புதிய பாதுகாப்புச் செயலாளரின் வாகனம் அதிவேகமாகச் சென்று சதுப்பு நிலத்தில் கவிழ்ந்தது.

புதிய பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொண்டவுக்கு வழங்கப்பட்ட வாகனம் சதுப்பு நிலத்தில் கவிழ்ந்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட இந்த வாகனம் வெலிக்கடை பாராளுமன்ற வீதியின் ஜயந்திபுர பகுதியில் உள்ள தியவன்னா சதுப்பு நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து இடம்பெற்ற போது பாதுகாப்பு செயலாளர் வாகனத்தில் பயணிக்கவில்லை என்பதுடன், சாரதியான இராணுவ சிப்பாயை வெலிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதுகாப்புச் செயலாளரை அழைத்து வருவதற்காக சாரதி வாகனத்தை ஓட்டிச் சென்ற போதே வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் சாரதிக்கு காயம் ஏற்படவில்லை எனினும் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது.