ஒடிசாவில் ஓய்வூதியம் பெறுவதற்காக 2 கிமீ தவழ்ந்து சென்ற மூதாட்டி!

80 வயது மூதாட்டி ஒருவர் தன்னுடைய பென்ஷன் பணத்தை வாங்குவதற்காக 2 கிலோமீட்டர் தவழ்ந்தே சென்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்திய மாநிலமான ஒடிசாவில் மூதாட்டி ஒருவர் தன்னுடைய பென்ஷன் பணத்தை வாங்குவதற்காக நடக்க முடியாமல் 2 கிலோமீட்டர் தவழ்ந்தே சென்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒடிசா மாநிலம் கியான்ஜ்கர் பகுதியில் உள்ள ரைசுவான் கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி பதூரி. இவர் மூத்த குடிமக்களுக்கான அரசு ஓய்வூதிய பணத்தை பெற்று வந்துள்ளார்.

இதனிடையே, வயது மூப்புடையவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்குச் சென்று ஓய்வூதியத்தை பணத்தை கொடுக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறு இருக்கையில் ரைசுவான் கிராம பஞ்சாயத்து அதிகாரி, இந்த மூதாட்டியை பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்து பென்சன் தொகையை வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதனால் மூதாட்டி பதூரி, தனது வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம் வரை தவழ்ந்து சென்று பென்ஷன் பணத்தை வாங்க கிளம்பியுள்ளார். இவரது வயது மூப்பின் காரணமாகவும், உடல்நலக்குறைவாலும் இவரால் நடக்க முடியவில்லை.

தற்போது, மூதாட்டி தவழ்ந்து செல்லும் வீடியோ வெளியானதால், அடுத்த மாதத்தில் இருந்து அவரது வீட்டிற்கே சென்று பென்ஷன் பணத்தை வழங்க வேண்டும் என்று மாவட்ட BDO அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.