திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கொரேனா பாதுகாப்பு கூட்டம்

அவசியமில்லாமல் அநாவசியமாக வீட்டைவிட்டு வெளியேறுவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்று திருக்கோவில் பிரதேச கொரோனா பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது…..
நாட்டில் தற்போது பரவிவரும் கொவிட்19 தாக்கத்தினை தடுப்பதற்காக பிரதேச செயலக ரீதியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் முன்னாயுத்த கலந்துரையாடல் கூட்டம் திருக்கோவில் பிரதேசசெயலாளர் த.கஜேந்திரனின் வழிகாட்டலில் பதில்பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது .
இக்கூட்டத்தில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் திருக்கோவில் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் செல்வி.அ.அனோஜா நிருவாக உத்தியோகத்தர் திருமதி ஜெயசுந்தரி .கணேசராஜா நிருவாக கிராம உத்தியோர்த்தர் திருமதி எஸ்..பரிமளவாணி சிரேஷ்ட கிராம உத்தியோகத்தர் கண.இராஜரெட்ணம் திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.ஜெயவீர திருக்கோவில் காஞ்சிரன்குடா 242 இராணுவ முகாம் கட்டளைத்தளபதி பி.திஸாநாயக்கா திருக்கோவில் வைத்தியசாலை அதியட்சகர் டாக்டர். எ.பி..மஸ்ஹுத் திருக்கோவில் விசேட அதிரடிபடை கட்டளைத்தளபதி திருக்கோவில் பொது சுகாதாரவைத்திய அதிகாரிகள் மற்றும் அக்கரைப்பற்று தெற்கு பலநோக்குகூட்டுறவுச்சங்கப் பொது முகாமையாளர் இ.மகேஸ்வரன்ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்வருமாறு:
வெளியிடங்களிலிருந்து திருக்கோவில் பிரதேசத்திற்கு வரும் நபர்கள் உடனடியாக கிராமசேவை அலுவலரிடம் பதியவேண்டும்.அதேபோல் ஞாயிறு சந்தை உள்ளிட்ட பலதேவைகளின்நிமித்தம் இங்குவரும் வாகனங்கள் அனைத்தும் பதியப்படவேண்டும்.
பொது மக்கள் வீட்டில் இருந்து வெளியேறும் போது முகக்கவசம் அணிதல்மக்கள் கூட்டமாக நிற்பதை தவிர்த்தல் மற்றும் வெளிச்சூழலில் இருந்து வீட்டுக்கு சென்றவுடன் கைகளை சவர்க்காரம் அல்லது கையை சுத்தசெய்யும் பதார்த்தங்களை இட்டு கைகளை கழுவுதல் வேலை இல்லா நேரங்களில் அநாவசியமாக வெளியில் வருவதை தடுத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என தீர்மானிக்கப்பட்டன.
அவசியமேற்படின் பொதுஇடங்களில் தொற்றுநீக்கவும் அவசியமான உணவுப்பொருட்களை நடமாடி விநியோகம் செய்யவும் முப்படையினர் சுகாதாரவைத்தியபணிமனையினர் பிரதேசசபையினர் தயார்நிலையிலிருக்கவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
எடுக்கப்பட்ட சகலதீர்மானங்களும் அந்தந்த பிரிவு ஆலய ஒலிபெருக்கிவாயிலாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட நடவடிக்கைஎடுக்கப்படவேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
– Sathasivam Nirojan