கோர விபத்தில் தம்பதி மரணம்!

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தம்பதியர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளும் வானும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 38 வயதுடைய கணவனும், அவரது 32 வயது மனைவியும் உயிரிழந்துள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிடடுள்ளனர்.
விபத்து தொடர்பில் வானின் சாரதியைக் கைது செய்துள்ள அக்குரஸ்ஸ பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.