பிகாரில் புனித நீராடும் பண்டிகையின்போது பல்வேறு நீர்நிலைகளில் மூழ்கி 43 பேர் பலி!

பிகாரில், ஜீவித்புத்ரிகா என்று பண்டிகை மாநிலம் முழுக்க கொண்டாடப்பட்ட நிலையில், பல்வேறு நீர் நிலைகளில் புனித நிராடிய 43 பேர் பலியாகியுள்ளனர் என்றும், மூன்று பேரை காணவில்லை என்றும் பிகார் அரசு தெரிவித்துள்ளது.

புதன்கிழமை, பிகார் மாநிலம் முழுக்க இந்த ஜீவித்புத்ரிகா பண்டிகைக் கொண்டாடப்பட்ட நிலையில், 15 மாவட்டங்களில் உள்ள குளங்கள், ஏரிகள், ஆறுகளில் ஏராளமான மக்கள் புனித நீராடிய போது 37 குழந்தைகள் உள்பட 43 பேர் பல்வேறு சம்பவங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்னும் 3 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஜீவித்புத்ரிகா பண்டிகை, பெண்கள், தங்கள் குழந்தைகள் நலமுடன் வாழ வேண்டும் என்று வேண்டி விரதமிருந்து கொண்டாடி, தாயும் குழந்தைகளும் நீர்நிலைகளில் புனித நீராடுவது வழக்கம்.

இந்த புனித நீராடலின்போது, ஏராளமானோர் ஒரே நேரத்தில் நீர்நிலைகளில் புனித நீராடியபோது, பலரும் நீரில் மூழகி உயிரிழந்துள்ளனர். இதில் கவலைதரும் தகவல் என்னவென்றால், யாரின் நலத்தை விரும்பி இந்த பண்டிகைக் கொண்டாடப்படுகிறதோ, அந்தக் குழந்தைகள்தான் அதிகம் இறந்துள்ளனர்.

இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.