தியாக தீபத்தின் நினைவேந்தல்! – தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி.

ஈழத் தமிழ் மக்களுக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

பிரதான நிகழ்வு யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் நடைபெற்றது.

தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு,
இரண்டு மாவீரர்களின் சகோதரியும் முன்னாள் போராளியுமான பெண்ணொருவர் பொதுச்சுடர் ஏற்றினார்.

அதனைத் தொடர்ந்து தியாக தீபத்தின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேவேளை, சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் இரண்டு தூக்குக் காவடிகள் நினைவிடத்துக்கு வந்திருந்ததுடன் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஊர்திப் பவனிகள் வந்திருந்தன.

Leave A Reply

Your email address will not be published.