மக்கள் பிரதிநிதிகளை பாடசாலைகளுக்கு அழைக்க வேண்டாம் – பிரதமர் அறிவுரை!
கல்வி அமைச்சின் அனைத்து திணைக்கள அதிகாரிகளுடன் இன்று (26) காலை இடம்பெற்ற சந்திப்பின் போது, மக்கள் பிரதிநிதிகளை பாடசாலைகளுக்கு அழைத்து வருவதை நிறுத்துமாறு புதிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைக் கல்வியின் அபிவிருத்தியே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக காணப்படுவதாகவும், கல்விக்காக அதிகளவான ஒதுக்கீட்டை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதன்போது வலியுறுத்தியுள்ளார்.