ரணிலோடு போன மொட்டுக்கள் அனாதைகளாக…. அடுத்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பொது தேர்தலில் போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமது வேட்பாளர் தோல்வியடைந்தமை மற்றும் போதியளவு வாக்குகள் கிடைக்காமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ரணில் விக்கிரமசிங்க , ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சியை ஏற்பாடு செய்து வருகின்றமையும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் மீண்டும் இவர்களை இணைத்துக் கொள்ள விருப்பம் இல்லை என ஏற்கனவே தெரிவித்திருந்தது.
எஞ்சியுள்ள ஒரே தெரிவாக இருக்கும் தினேஷ் குணவர்தன தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டாலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற முடியாது என்பதே அவர்களின் மதிப்பீடு.
பொதுஜன பெரமுனவின் முன்னாள் சிரேஷ்ட மற்றும் ஜூனியர் எம்.பி.க்கள் பலர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.