தீப்பிடித்து எரிந்த அரசு விரைவுப் பேருந்து – சிக்கிய 52 உயிர்கள்!

அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் இருந்து அரசு விரைவுப் பேருந்து ஒன்று திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. தாராபுரம் புறவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்த போது இன்ஜின் கோளாறு காரணமாக பேருந்தில் இருந்து புகை வெளியேறியுள்ளது.

அதனைத் தொடர்ந்து பேருந்தில் தீ பிடித்துள்ளது. உடனே அதனை அறிந்துக்கொண்ட ஓட்டுநர் கணேசமூர்த்தி (55) மற்றும் நடத்துனர் சிகாமணி (60) துரிதமாக செயல்பட்டு, பேருந்தில் இருந்த 52 பயணிகளையும் கீழே இறக்கிவிட்டுள்ளனர்.

பயணிகள் நிலை?

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. 10-நிமிடத்திற்குள் பேருந்து முழுவதும் மளமளவென பரவிய தீயால் முழுவதுமாக எரிந்தது. பின் தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2- மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதனையடுத்து மாற்றுப் பேருந்து வரவழைக்கப்பட்டு அனைத்து பயணிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை நோக்கி செல்லும்

புறவழிச்சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.