பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம் ?
வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இன்று (27) பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படவுள்ளதாக தேசிய மக்கள் விடுதலைப் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வதகல தெரிவித்துள்ளார்.
இதன்படி, பிரியந்த வீரசூரிய பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வரை பொலிஸ் திணைக்களத்தில் 36 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றிய ஒரு அதிகாரி ஆவார்.