காலிமுகத்திடலில் தரித்து நின்ற எந்த வாகனமும் தவறாக பயன்படுத்தப்பட்டவை அல்ல : முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க.
ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் எதுவும் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என்றும், அந்த வாகனங்கள் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த வாகனங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோப்பு இருக்கிறதா? யார் பயன்படுத்தினார்கள்? என்ன கடமைகள் பயன்படுத்தப்பட்டன? என கோப்புகளை சரிபார்த்தால் தெரியும் என்றார்.
தற்போதைய ஜனாதிபதி பதவி ஏற்ற பின்னர் அந்த வாகனங்களைப் பயன்படுத்திய உரிய அதிகாரிகள் அதனை சட்ட ரீதியாக ஒப்படைப்பது, அவசியமானதாக கருதியதாகவும் ஏக்கநாயக்க வலியுறுத்தினார். மேலும், அரசாங்கத்திற்கு சொந்தமான இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியில்லாத நிலையிலேயே ஜனாதிபதி செயலக வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எந்த வாகனமும் காணாமல் போகவில்லை என்றார். தற்போதைய ஜனாதிபதியின் பதவிப் பிரமாண நிகழ்வில் உத்தியோகபூர்வ கடமையாக கலந்து கொண்டு, தான் பயன்படுத்திய உத்தியோகபூர்வ காரையும் கையளித்து விட்டு சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.