“சண்டைநிறுத்தம் எனும் பேச்சுக்கே இடமில்லை” – இஸ்ரேல்
இஸ்ரேல் அமெரிக்காவின் தலைமையில் முன்வைக்கப்பட்ட 21 நாள் சண்டைநிறுத்தப் பரிந்துரையை நிராகரித்துள்ளது.
சண்டைநிறுத்தம் எனும் பேச்சுக்கே இடமில்லை என்றார் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz).
வெற்றி கிடைக்கும்வரை ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிடப்போவதாக அவர் சொன்னார்.
லெபனானைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஹிஸ்புல்லா குழுவின் முக்கிய இடங்களை இஸ்ரேல் இவ்வாரம் தாக்கியது. அதில் நூற்றுக்கணக்கானோர் மாண்டனர்.
ஹிஸ்புல்லா, எறிபடைகளைப் பாய்ச்சி பதிலடி கொடுத்தது.
இந்நிலையில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு ஹிஸ்புல்லா குழுவுக்கு எதிராக முழுபலத்துடன் போரிடுமாறு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.