பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி உடல்நலக்குறைவால் காலமானார்!
பத்மஸ்ரீ விருது பெற்ற கோவையைச் சேர்ந்த பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 109.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள். தள்ளாத வயதிலும், இயற்கை விவசாயம், ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம், அரசியல் என்று சுறுசுறுப்பாக வலம் வந்துகொண்டிருந்த பாப்பம்மாள் வயது மூப்பின் காரணமாக அவரது வீட்டில் காலமானார்.
விவசாயம் மட்டுமின்றி அரசியலிலும் கால்பதித்துள்ளார் பாப்பம்மாள் பாட்டி,1959ஆம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சி உறுப்பினராகவும், 1964ஆம் ஆண்டு யூனியன் கவுன்சிலராகவும், மாதர் சங்கத் தலைவியாகவும் பல பதவிகளை வகித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. கடந்த 17ஆம் தேதி சென்னையில் நடந்த விழாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டிக்கு தமிழக அரசு தந்தை பெரியார் விருது வழங்கி கௌரவித்தது.