‘அநுர ஜனாதிபதி – சஜித் பிரதமர்’ என்ற தொனிப்பொருளில் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்க போகும் SJB…

SJB எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தனது செயற்பாடுகளை ஆரம்பிக்க ஏற்பாடு செய்து வருகின்றது.
இதன்படி ‘அநுர ஜனாதிபதி சஜித் பிரதமர்’ என்ற தொனிப்பொருளில் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்கவுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிக்கு எதிராக பிரசாரம் செய்வதில் உள்ள சிரமம் காரணமாக அனுர திஸாநாயக்கவுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப அதிகாரம் கேட்கின்றனர்.
சஜித் பிரேமதாச ஏற்கனவே ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தபட்டுள்ளார்.