திங்கட்கிழமைக்கு முன் வரி கட்ட அறிவித்தல் : அல்லது அபராதமும் வட்டியும் சேர்ந்தே வரும்.
மதிப்பீட்டு ஆண்டு தொடர்பான அனைத்து வருமான வரியும் எதிர்வரும் திங்கட்கிழமை (30) அல்லது அதற்கு முன்னர் செலுத்தப்பட வேண்டுமென உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் சேபாலிக சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
வருமான வரி செலுத்தாத அல்லது தாமதமாக செலுத்தியதற்காக ஒரு நபர் சட்டப்படி அபராதம் மற்றும் வட்டிக்கு உட்பட்டவர்.
எவராவது ஒருவர் செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் நிலுவைத் தொகை இருந்தால், அவை அனைத்தும் வரும் திங்கட்கிழமை அல்லது அதற்கு முன் செலுத்தப்பட வேண்டும்.
திங்கட்கிழமைக்குப் பிறகு, வரி செலுத்தாமல் நிலுவைத் தொகை இருந்தால், அவற்றை வசூலிக்க உள்நாட்டு வருவாய் சட்டத்தின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
1944 உடனடி தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது அருகிலுள்ள உள்நாட்டு வருவாய் பிராந்திய அலுவலகத்திலிருந்தோ விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.