மன்னாரிலுள்ள பிற மாவட்டப் பணியாளர்கள் வெளியேற்றம்.
மன்னாருக்குக்கான சகல
போக்குவரத்துகளும் தடை
பிற மாவட்டப் பணியாளர்கள் வெளியேற்றம்
மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வென்னப்புவ பணியாளருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி்செய்யப்பட்டதால் மன்னார் மாவட்டத்துக்கான அனைத்துப் போக்குவரத்துக்களும் உடனடியாக தடைத் செய்யப்பட்டுள்ளன. அதேவேளை, அங்கிருந்து பிற மாவட்டப் பணியாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
குறித்த தொற்றாளர் வென்னப்புவவில் இருந்து இரு வாரங்களுக்கு முன்பாகவே பணிக்குத் திரும்பியதால் இவருடன் கூடப் பணியாற்றிய 22 பணியாளர்களுக்கும் உடனடியாக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் அத்தியாவசியம் அற்ற வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு அரச செயலகங்களில் அனைத்திலும் பணியாற்றும் பிற மாவட்டப் பணியாளர்கள் கடமைக்குச் சமூகமளிக்க வேண்டாம் எனக் கோரப்பட்டுள்ளது.
இதேநேரம், மன்னார் மன்னார் ஆயர் உள்ளிட்ட பகுதி உடனடியாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது. பி.சி.ஆர் பரிசோதனையின் பின்பே மாவட்டத்தின் மேலதிக நிலவரம் தெரிவிக்க முடியும் என்று மன்னார் மாவட்ட பதில் அரச அதிபர் குணபாலன் தெரிவித்தார்