ரணிலை அழைக்கின்றது ஆசிய அபிவிருத்தி வங்கி.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமைப் பதவியை ஏற்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.
எதிர்வரும் மார்ச் மாதம் முதல் இந்தப் பதவியை ஏற்குமாறு அவரிடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், இது தொடர்பில் தமது பதிலை ரணில் விக்கிரமசிங்க இன்னும் வழங்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட்ட விதத்தை அவதானித்த பிறகே அவருக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.
இனி நாடாளுமன்ற அரசியல் பயணத்தில் ஈடுபடப்போவதில்லை என ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தெரியப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
………………..