அரசு வாகனங்களில் இலச்சினை மற்றும் நிறுவனம் அல்லது அமைச்சின் பெயர் பொறிக்கப்பட வேண்டும்.
அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களில் அரச இலச்சினை மற்றும் நிறுவனம் அல்லது அமைச்சின் பெயரை பொறிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
அரச வாகனங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், குறித்த அறிவுறுத்தல்கள் முறையாக பின்பற்றப்படவில்லை என தெரியவந்துள்ளது.
அரச இலச்சினைக்கு மேலதிகமாக அமைச்சு அல்லது நிறுவனத்தின் பெயரும் வாகனத்தில் எழுதப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கமும் அவ்வாறே அந்த சுற்றறிக்கையை அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.