நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி வெற்றி.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்று (29) இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நான்காவது நாளான இன்று (29) ஆட்டம் ஆரம்பிக்கும் போது 514 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முதல் இன்னிங்சில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 602 ரன்கள் எடுத்த நிலையில், நியூசிலாந்து அணியால் முதல் இன்னிங்சில் 88 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி மீண்டும் பந்து வீச்சில் 360 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.

இலங்கையின் முதல் இன்னிங்ஸ் சார்பாக கமிது மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 182 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 116 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களையும் பெற்றனர்.

போட்டியின் நாயகனாக கமிந்து மெண்டிஸும் போட்டியின் நாயகனாக பிரபாத் ஜயசூரியவும் தெரிவானார்கள்.

Leave A Reply

Your email address will not be published.