5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் வெளியான 3 கேள்விகள் தொடர்பில் விசேட தீர்மானம் இதோ….
இவ்வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் வெளியான மூன்று கேள்விகள் தொடர்பில் விசேட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இது தொடர்பாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் இருந்து அந்த மூன்று கேள்விகளுக்குமான மதிப்பெண்களை அனைத்து மாணவர்களுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் தெரிவிக்கிறார்.
அதாவது, சர்ச்சைக்குரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இவ்வருடம் மீண்டும் நடத்தப்படுமா? இல்லையா? என்பதை தீர்மானிப்பதற்காக 07 பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர தெரிவித்தார்.
இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில் சில வினாக்கள் கசிந்தமையினால் பிரச்சினையான சூழ்நிலை உருவானதுடன், பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.