300 பார் பெர்மிட்கள் இரத்து! ஜனாதிபதி அநுர அதிரடி நடவடிக்கை.

இம்மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முன்னாள் எம்.பிக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்ட 300 பார் பெர்மிட்களை உடனடியாக இரத்துச் செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை
எடுத்துள்ளார் என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
முறையற்ற விதத்தில் பார் பெர்மிட்களைப் பெற்ற முன்னாள் எம்.பிக்கள் உள்ளிட்ட நபர்களின் பெயர் விபரங்களையும் தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
……………..