முதல் வழக்கு நாமலுக்கு.. நீதிமன்றத்திற்கு பொலிஸாரிடமிருந்து அறிக்கை..

ஜனாதிபதி வேட்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிரசார நடவடிக்கைகளுக்கு லங்கா மின்சார பிரைவேட் நிறுவனத்தின் நலன்புரி திணைக்களத்திற்கு சொந்தமான வாகனம் அனுராதபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படுவதாக வந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கடந்த 27ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸார் கோட்டை நீதவான் திருமதி தனுஜா லக்மாலிக்கு அறிவித்துள்ளனர் .

தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பான விசாரணை தொடர்பான பி அறிக்கையை சமர்ப்பித்து வாகன சாரதியின் தொலைபேசி பதிவுகளை பெற்றுக்கொள்ள நீதவான் கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

பராமரிப்புக்காக வாகனத்தை கரேஜுக்கு அனுப்புவதாகக் கூறிவிட்டு, அதன் பின்னர் ஹொரவ்பத்தனையில் உள்ள தனது வீட்டில் நேத்தி இருப்பதாகக் கூறி இரண்டு நாட்கள் விடுமுறையில் சென்ற சாரதி, கடந்த ஆகஸ்ட் 21ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெற்ற நாமல் ராஜபக்ஷவின் கூட்டத்தின் பிரசார நடவடிக்கைகளுக்காக வாகனத்தைப் பயன்படுத்தியுள்ளார் என பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

லங்கா மின்சார தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மொண்டேரோ ஜீப் வாகனம் தொடர்பிலேயே இந்த உத்தரவு கோரப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.