போலீஸ் அதிகாரி மர்மமான முறையில் மரணம்
அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் சார்ஜன்ட் மரணம் குறித்த நீதவான் விசாரணை பலப்பிட்டிய பதில் நீதவான் சமந்த அப்ரேவினால் நடத்தப்பட்டதோடு, பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி திருமதி எச்.எம்.ஏ.துஷாரியினால் பிரேத பரிசோதனை (29) பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்டது.
ஹிபிலியவத்தை, உவாபரணகம பகுதியைச் சேர்ந்த ஹேவடித்தெனிய திலகசிறி (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார். 691721906V என்ற தேசிய அடையாள இலக்கத்தைக் கொண்ட இந்த பொலிஸ் சார்ஜென்ட், பொலிஸ் திணைக்களத்தில் 11033 இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளார்.