நதிக்கரைகள் உடைந்தன… பிகாரில் மோசமடைந்த வெள்ள பாதிப்புகள்!
பிகாரின் தர்பங்கா மாவட்டத்தில் கோசி ஆற்றிலும், சீதாமரி மாவட்டத்தின் பாகமதி ஆற்றிலும் கரைகள் உடைந்ததைத் தொடர்ந்து, பல பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் மோசமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தினால் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கிராம மக்கள் மபலரும்பாதுகாப்பான இடங்களுக்கு அழைதுச் செல்லப்பட்டுள்ளனர். ”நதிக் கரைகள் உடைந்ததால் வெள்ள பாதிப்பு மோசமாகியுள்ளது. ஆனால், அவை கட்டுக்குள் உள்ளன. யாரும் பயபடத் தேவையில்லை” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“மாநிலத்தின் நீர்வளம் மற்றும் பேரிடர் மீட்புத் துறையினர் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர். மாநிலம் முழுக்க 6 இடங்களில் இதுவரை கரைகள் உடைந்துள்ளன. அவற்றைப் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தர்பங்காவின் வால்மிகிநகர் மற்றும் கீரத்பூர் பகுதிகளில் தடுப்பணைகளைக் கடந்து நீர் பாய்ந்தது பற்றி தகவல் கிடைத்தது. ஆனால் இப்போது பல இடங்களில் நீர்மட்டம் குறைந்துவிட்டது. வெள்ளத்தால் பிகாரில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை” என நீர்வளத்துறை அமைச்சர் விஜய் குமார் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
வடக்கு பிகாரில் ஏற்பட்ட வெள்ளத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, வரணாசி மற்றும் ராஞ்சியிலிருந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மேலும் ஆறு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 12 தேசிய பேரிடர் மீட்பு படைகளும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் 22 குழுக்களும் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பேரிடர் மேலாண்மை துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.