மதுபான நிலையத்தை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்

மன்னாரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபான நிலையத்தை உடனடியாக இடமாற்றக் கோரி மக்கள் போராட்டம்.

மன்னார்தலைமன்னார் பிரதான வீதி,எழுத்தூர் சந்திக்கு அருகாமையில்புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபான நிலையத்தை உடனடியாக இட மாற்றக்கோரி இன்றைய தினம் (30.09) காலை 9 மணியளவில் குறித்த மதுபானநிலையத்திற்கு முன்பாக மன்னார் மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த மதுபான நிலையம் அமைந்துள்ள பகுதியில் மக்களின் குடியேற்றம்,இளைஞர் பயிற்சி நிலையம்,காமன்ஸ்,பள்ளிவாசல் ஆகியவை அமைந்துள்ள நிலையில் மக்கள் இதனை அமைப்பதற்கெதிராகத் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் மக்களின் எதிர்ப்பைக் கருத்திற் கொள்ளாது குறித்த மதுபானநிலையம் அமைக்கப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளத

.

கடந்த மாதம் குறித்த மதுபான நிலையத்தைத் திறக்க அனுமதிக்க வேண்டாம்என கோரி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்ததோடு, தொடர்ந்தும் பல்வேறு எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தபோதிலும் குறித்த மது விற்பனை நிலையம் கடந்த வாரம் திறக்கப்பட்டுள்ள நிலையிலேயே வீதிக்கு இறங்கியுள்ளதாகப் போராட்டக் காரர்கள்தெரிவித்துள்ளனர்.

பிரேத பெட்டி ஒன்றுடன் குறித்த பகுதிக்கு வந்த நூற்றுக்கணக்கான மக்கள்பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில்ஈடுபட்டனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப்மக்களுடன் கலந்துரையாடினார்.எனினும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்குறித்த பகுதிக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தொடர்ந்தும் போராடிய நிலையில்,

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் .கனகேஸ்வரன் குறித்த பகுதிக்கு வருகைதந்து மக்களுடன் கலந்துரையாடினார்.

இதன் போது மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் அரசாங்க அதிபரிடம்கையளிக்கப்பட்டது.அதனைப் பெற்றுக் கொண்ட அரச அதிபர்,

இவ்விடயம் குறித்து உடனடியாக மதுவரி திணைக்கள ஆணையாளரின்கவனத்திற்கு கொண்டு வருவதாகவும்,குறிப்பாக ஜனாதிபதியின் கவனத்திற்குகொண்டு வந்து குறித்த மதுபானசாலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கைஎடுப்பதாகவும், தொடர்ச்சியாக மக்களின் எதிர்ப்பு காணப்படுகின்ற நிலையில்குறித்த மதுபானசாலை திறக்கப்பட்டுள்ள விடயத்தை உரிய தரப்பினரின்கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அரச அதிபர் வாக்குறுதியளித்தமையால்

மக்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.