நூலகங்களில் இலவச அங்கத்துவங்களை பெறுவதற்கான வாய்ப்பு.
மட்டக்களப்பு மாநகர மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் மாநகர சபையின் நிருவாகத்தின் கீழ் இயங்கும் நான்கு நூலகங்களிலும் ஒரு மாத காலத்திற்கு இலவச அங்கத்துவத்தினை பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய வாசிப்பு மாதம் ஒக்டோபர் 01 ஆந் திகதி தொடக்கம் 31 ஆந் திகதி வரையான காலப் பகுதியில்
நடை முறைப்படுத்தவப்
படுவதையொட்டயே இச்
சலுகை வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பொது நூலகம், அரசடி பொது நூலகம், கல்லடி பொது நூலகம், மற்றும் புதூர் பொது நூலகம் ஆகிய நூலகங்களில் ‘நூலொன்றை வாசிப்போம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாத செயற்பாடுகள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக நூலக மற்றும் மக்கள் மேம்பாட்டுக் குழுவின் வழிகாட்டலின் கீழ் சுகாதார வழிமுறைகளைப் பேணி அந்தந்த நூலகர்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு பொது நூலகத்தில் வளர்ந்தவர்களுக்கான அங்கத்துவக் கட்டணமாக 300 ரூபாவும் சிறுவர்களுக்கான அங்கத்துவக் கட்டணமாக 200 ரூபாவும் அறவிடப்படுவதோடு ஏனைய மூன்று நூலகங்களிலும் வளர்ந்தவர்களுக்கான அங்கத்துவக் கட்டணமாக 200 ரூபாவும் சிறுவர்களுக்கான அங்கத்துவக் கட்டணமாக 100 ரூபாவும் அறவீடு செய்யப்படுகின்றன.
இந்த கட்டணங்களுக்கே தேசிய வாசிப்பு மாதத்தில் விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாநகர சபையின் கீழ் மேலும் ஐந்து வாசிகசலைகள் இயங்கி வருகின்றன. இவை விரைவில் தரம் 3 நூலகங்களாக தரமுயர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது