யாழ்ப்பாணத்தில் உலக அஞ்சல் தின நிகழ்வு.

உலக அஞ்சல் தின நிகழ்வு யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்தில் பிரதம தாபலதிபரின் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது
ஒக்டோபர் 9 உலக அஞ்சல் தினம் இன்று யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்தில் பிரதம தாபலதிபரின் தலைமையில் நடைபெற்றது.
தேசிய கொடியினை பிரதம தபாலதிபர் சஜித் பெரேரா ஏற்றி வைக்க அஞ்சல் கொடியினை பிரதி பிரதம தபாலதிபர்திருமதி பிரபாகரன் சாந்த குமாரி ஏற்றி வைத்தார். தபால் உத்தியோகத்தர்களின் அஞ்சல் சத்திய பிரமாண நிகழ்வும் நடைபெற்றது .
தற்போதுள்ள கொரோணா தொற்று அச்ச நிலை காரணமாக மிகவும் எளிமையான முறையில் மட்டுப்படுத்தப்பட்ட அஞ்சல் திணைக்கள ஊழியர்களின் பங்கு பற்றுதலோடு உலக அஞ்சல் தினநிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.