சிலாபத்தில் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவனுக்கும் கொரோனா!

சிலாபம் பகுதியைச் சோ்ந்த பாடசாலை மாணவன் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவன் ஆராச்சிக்கட்டுப் பகுதியில் வசிப்பவர் எனவும், இம்முறை ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை எழுதத் தயாராக இருந்தார் எனவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது எனவும் பொலிஸார் கூறினார்.
இவர் எவ்வாறு கொரோனாத் தொற்றுக்குள்ளானார்? என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. இவரது தொற்று மூலத்தை அறிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவன் தற்போது சிலாபம் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த மாணவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய சக மாணவா்கள் மற்றும் அவரது உறவினர்கள் கண்டறியப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
………