பெற்றோல் 120க்கு தரப்படும் என்றோ, காஞ்சன 160 ரூபாயை பாக்கெட்டில் போட்டுக் கொண்டார் என்றோ நான் கூறவில்லை..- ஹதுன்நெத்தி மறுப்பு.

ஒரு லீற்றர் பெற்றோலுக்கான வரியை நீக்கிய பின்னர் அதனை 120 ரூபாவில் சந்தையில் தர முடியும் என தாம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

தாம் அவ்வாறு கூறியதாக யாராவது கூறினால் அது தொடர்பான காணொளியை பகிரங்கப்படுத்துமாறு சவால் விடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தான் கூறியதாகக் கூறப்படும் அந்த அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு போலிச் செய்திகள் உருவாக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடும் அவர், அவ்வாறான கருத்தை தாம் வெளியிடவில்லை எனக் கூறியதோடு , அப்படியான ஒரு வீடியோ இருந்தால் அதனை வெளியிடுமாறு சவால் விடுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி செய்தி இதுதான் ,வரி நீக்கப்பட்ட பிறகு, ஒரு லிட்டர் பெட்ரோல் 120 ரூபாய்க்கு வழங்கப்படலாம் என்றும், அவரது ஆட்சியில் ஓராண்டுக்கு மக்களுக்கு நிவாரணமாக அந்த விலையில் வழங்கப்படும் என்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அறிக்கை கூறுகிறது. ஒரு லீற்றர் பெற்றோலில் இருந்து பெறப்பட்ட வரித் தொகையை முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் சட்டைப் பைக்குள் சென்றுள்ளதாகவும் அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.