இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளைப் பாய்ச்சிய ஈரான்.

ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது.
ஈரான் மொத்தம் 180 ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக இஸ்ரேலிய ராணுவம் சொல்கிறது.
அவற்றில் பெரும்பகுதி இடைமறிக்கப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் சொன்னது.
யாருக்கும் பெரிய காயம் இல்லை என்றும், பொது மக்கள் காப்பறைகளில் இருந்து வெளியே வரலாம் என்று சொல்லிவிட்டதாகவும் இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினர்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) ஈரான் பெரிய தவறு செய்துவிட்டதாகக் கூறினார்.
அதற்கு ஈரான் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று அவர் சொன்னார்.
அதிபர் ஜோ பைடன் (Joe Biden), அமெரிக்கா, இஸ்ரேலை முழுமையாக ஆதரிப்பதாகச் சொன்னார்.
இதுவரை கிடைத்த தகவல்படி ஈரானின் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும், அது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் பைடன் குறிப்பிட்டார்.