ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் -விசேட அறிவித்தல்!

விசேட அறிவித்தல்!
இதுவரை காலமும் எமது மிகச் சிறந்த செயற்பாடுகள் காரணமாக நாம், நமது குடும்பம் மற்றும் நமது நாடு முழுவதும் உயிர்கொல்லி நோயான COVID-19 வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட்டோம்.
இருப்பினும் இக்கொடிய COVID-19 வைரஸ் தாக்கம் மீண்டும் தற்போது எமது நாட்டினை சவாலுக்குள்ளாக்கியுள்ளது. எனவே இதுவரைகாலமும் உலகில் பத்து இலட்சம் உயிர்களுக்கு மேல் காவு கொண்ட கொடிய COVID-19 வைரஸ் பரவலிலிருந்து நாமும் நமது அன்புக்குரியவர்களும் பாதுகாப்பாயிருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் வெளியில் சென்று வேலைகளை முடித்துவிட்டு வீட்டை அடைந்தவுடன் உள்ளே நுழையாது, நீராடி முடித்த பின்னரே வீட்டுக்குள் நுழையவேண்டும். மேலும்; தங்களது ஆடைகளைப் பொருத்தமான முறையில் அகற்றி, அவற்றையும் சவர்க்காரமிட்டுக் கழுவிய பின்னர் நன்றாக வெயிலில் உலரவிட வேண்டும்.
மிக அவசியமாக, தங்களது கைகளைத் தொற்றுநீக்கிகளைப் பயன்படுத்தி அடிக்கடி கழுவுவதன் மூலமும், எமது மூக்கு, வாய், கண் போன்றவற்றைத் தொடுவதைத் தவிர்ப்பதன் மூலமும் இக்கொடிய COVID-19 வைரஸ் கிருமி எமது உடலுக்குள் செல்வதைத் தவிர்க்கலாம்.